HEALTH IS WEALTH

Health is wealth

As the saying goes, a disease free life is an infinite wealth, a disease free life is considered as one of the greatest assets in this world. Especially in this century we are suffering from various new diseases at an unprecedented rate. All these diseases are seen to challenge the modern medical world. Most importantly, non-communicable diseases such as diabetes, high blood pressure, cancer and heart disease have increased.

The main reason why we are stuck in these is none other than because we have forgotten or neglected our traditions. “Tradition” means traditional – foods, clothes, sports and life-style that we have forgotten (or) left behind and we have lost our healthy life and are suffering from new diseases.

So, even now, time has not yet passed, if we examine and bring back the legacy handed down to us by our forefathers, surely we can live a healthy life, not only that, but also create a healthy society and future generations…

see you again,

Dr. Carl Lewis.
9344877780

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

என்ற பழமொழிக்கேற்ப இந்த உலகத்தில் நோயில்லாமல் வாழ்வதே ஒரு மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த நூற்றாண்டில் முன் எப்பொழுதும் இல்லாத அளவில் பல்வேறு புதிய புதிய நோய்களால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். இந்த நோய்கள் யாவும் நவீன மருத்துவ உலகிற்கே சவால் விடும் வகையில் காணப்படுகின்றன. மிக முக்கியமாக தொற்றா நோய்களான (non communicable diseases) சர்க்கரை நோய்‌, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் இருதய நோய்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளோம். இவைகளில் நாம் சிக்கிக்கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் வேறு ஒன்றுமே இல்லை அது நாம் நம் பாரம்பரியத்தை மறந்து அல்லது கைக்கொள்ளாமற்போனதே காரணமாகும்.

“பாரம்பரியம்” என்றால் பாரம்பரிய- உணவுகள், உடைகள், விளையாட்டுகள் மற்றும் வாழ்க்கைமுறை போன்றவற்றை மறந்து (அ)விட்டுவிட்டதால் நம் ஆரோகிய வாழ்வை தொலைத்து, புதிய நோய்களோடு அவதிப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.

எனவே, இப்போதும் காலம் கடந்து போகவில்லை, நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துக்கொடுத்த பாரம்பரியத்தை ஆராய்ந்து தூசித்தட்டி மீண்டும் நம் கையில் எடுப்போமானால்,

நிச்சயமாகவே நாம் ஆரோகியமாக வாழலாம், அது மட்டும் இல்லாமல் ஆரோகியமான சமுதாயத்தையும், எதிர்கால சந்ததியையும் உருவாக்கலாம்…

மீண்டும் சந்திப்போம்,

மருத்துவர். கார்ல் லூயிஸ்.
9344877780

Open chat
Hope Siddha
Hello
Can we help you?